Friday, October 8, 2010

ஜோக்ஸ் 1

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
------------------------------------------------------------------------------------------------

சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
------------------------------------------------------------------------------------------------

ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..
அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...

டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...
அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?

டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...

அவன்:- ????????????????
------------------------------------------------------------------------------------------------

இந்திய பாகிஸ்தான் எல்லை. பாகிஸ்தானின் நுழைவு வாயில்.

சர்தார் இளைஞன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் வந்தான். அவன் தோள்களில் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

பாகிஸ்தானின் எல்லைக் காவல் அதிகாரி இக்பால் கேட்டார்; "பையில் என்ன கண்ணா?"

"ஆத்து மண்"

அவர் வாங்கிப் பார்த்தார். உண்மையில் மணல்தான்.

இருந்தாலும் அதைச் சோதனை செய்ய விரும்பிய அவர். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஷெட் ஒன்றில் அவனை இருக்கச் சொன்னார்.

மணல் இருந்த பைகள் இரண்டும் அருகில் இருந்த நகரத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இளைஞன் இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் பரிசோதனை முடிவுடன் பைகள் திரும்பி வந்தன. வெறும் மணல்தான் அவனை உள்ளே விடலாம் என்ற உத்தரவும் இருந்தது.

இக்பால் சர்தாரை உள்ளே அனுமதித்தார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் சர்தார் அங்கே வந்து சேர்ந்தான். தோள்களில் அதே மணல் பைகள் விசாரித்துப் பரிசோதனை செய்தவர். உண்மையில் இந்த முறையும் மணல் இருப்பதையே பார்த்து, அவனை உள்ளே அனுமதித்தார்.

இது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது.

அதோடு மட்டுமல்ல மூன்று வருடங்கள் தொடர்ந்து நடந்தது.

ஒரு நாள் அந்த பாதுகாப்பு அதிகாரி இக்பால், சர்தாரை, இஸ்லாமாபாத் அருகே
உள்ள உணவு விடுதி (தாபா) ஒன்றில் சந்தித்தார்.

குறுகுறுப்புடன், அவனிடம் பேசினார், "டேய் தம்பி! உன்னிடம் வெகு நாட்களாக
ஒன்று கேட்க வேண்டும் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம்
இப்போதுதான் கிடைத்தது."

"என்ன கேட்க வேண்டும்? கேளுங்கள்" என்றான் சர்தார்.

"நீ மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும், சரியா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்! கேட்கட்டுமா?"

"ஆகா, கேளுங்கள், நீங்கள் இவ்வளவு சொல்லியபிறகு மறைப்பேனா?"

"நீ பார்டரின் அந்தப் பக்கம் இருந்து எதையோ கடத்திக்கொண்டு, வாராவாரம் இந்தப் பக்கம் வருகிறாய் என்று உணர்கிறேன். ஆனால் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை!. சொல்லுடா, கண்ணா, எதை அப்படிக் கடத்துகிறாய்?"

சர்தார் தன் கையில் இருந்த லஸ்ஸியை ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் புன்னகையுடன் சொன்னான்:

"மோட்டார் சைக்கிள்ஸ்"
------------------------------------------------------------------------------------------------

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார்

"ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
------------------------------------------------------------------------------------------------

சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
------------------------------------------------------------------------------------------------

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் 25 பேர் மாட்டிக் கொள்ள, திடீரென உள்ளே நுழைந்து 6 பேரைக் காப்பாற்றினார் அந்த சர்தார்ஜி. ஆனாலும் அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்தது போலீஸ். ஏனாம்?

பின்னே, அவர் வெளியே இழுத்துக் காப்பாற்றிய அந்த 6 பேரும் தீயணைப்பு வீரர்களாச்சே!
------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும் மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment