Friday, October 8, 2010

சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம். வருடத்தின் பனிரெண்டு சிவராத்திரி நாட்களில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி யையே மகா சிவராத்திரி என்கிறோம். இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.

விஞ்ஞானரீதியாகவே மகா சிவராத்திரி நாள் ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிக பெரும் உறுதுணையாக இருக்கிறது மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகு தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது. மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனித தளங்களிலும் ஆலயங்கச்ளிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

யோக மரபில் சிவன் ஒரு கடவுளாக வழிபட படாமல் ஆதி குருவாக, முதலாவது குருவாக கருதபடுகிறார். ஆன்மீக பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில் தான் கைலாய மலையுடன் ஒன்றினைகிறார். அவர் ஒரு மலையை போல முழுமையான நிச்சலனமாகிறார்.

பல்லாண்டு ஆத்மா சாதனைகளுக்கு பிறகு, ஒருநாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆள்கிறார்.அந்த நாள்தான் மகா சிவராத்திரி ஆகும். அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து சலனங்களும் அசைவற்று போகின்றன.

-சற்குரு வாசுதேவ்

0 comments:

Post a Comment