Friday, October 22, 2010

pi

π (sometimes written pi) is a mathematical constant whose value is the ratio of any circle's circumference to its diameter in Euclidean space; this is the same value as the ratio of a circle's area to the square of its radius. It is approximately equal to 3.14159265 in the usual decimal notation. Many formulae from mathematics, science, and engineering involve π, which makes it one of the most important mathematical constants.






Computer animation used to demonstrate the geometric concept of π

Sunday, October 17, 2010

வாழ்க்கையோடு விளையாடுங்கள்

மனித மனம் லாவகமாக கையாளப்பட வேண்டிய கருவி. சரியான எண்ணங் களை அதில் புகுத்தினால் ஒழிய அதனை முறையாக இயக்க முடியாது. இன்று நம்மில் பெரும்பாலான வர்கள் வாழ்வில் விலக்க வேண்டிய விஷயங் களையே திரும்பத் திரும்ப சிந்தித் துக் கொண்டிருக்கும் தவறைச் செய்கிறார்கள். தேவையான எண்ணங்கள் மனதில் புகத் தொடங்கினால், தேவையில்லாதவை தானாகவே விலகி விடைபெற்றுவிடும்.

மனதை, மின்சார சாதனங்களைப் போல தேவைப்பட்டால் இயக்கவும், இல்லையென்றால் நிறுத்தவும் முடியும். ஆனால், அந்த அளவுக்கு ஆளுமைப்பண்பு நம்மிடம் இருக்கவேண்டியது அவசியம்.

பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்பார்ப்பது போல, உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று சிலர் ஜோதிடத்தை நம்பி காத்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் அமைக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால், உங்களை எப்படி வடிவமைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கை, இந்த சமூகத்தின் வாழ்க்கை அனைத்துமே அமையப் போகிறது.

மனிதன் தன் கையில் எதுவும் இல்லை என்று ஏங்கிக் கொண்டு இருந்தால் ஒரு பயனும் விளையாது. நம்மிடம் இருப்பதை சிறப்பாக பயன்படுத்தத் தொடங்குவதே வெற்றிக்கான வழியாகும்.

எந்த ஒன்றையும் பதட்டத்தோடு அணுகும் போது நம்முடைய மன ஆற்றல் குறைந்து விடும். செயல்திறன் மங்கிவிடும். ஆனால், நிதான புத்தியுடன் செய்யும்போது சிறப்பாக செய்ய முடியும்.

வாழ்க்கையோடு நாம் விளையாடவேண்டுமே ஒழிய, வாழ்க்கை நம்மோடு விளையாட அனுமதிக்கக் கூடாது. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் இது சாத்தியமான ஒன்று தான்.

வேண்டும் வேண்டாம் என்ற எதிர்பார்ப்புகளே எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையை அதன் இயல்போடு முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது, மகிழ்ச்சிக்குறைவு உண்டாகாது

- ஜக்கி வாசுதேவ்

Friday, October 15, 2010

அடங்குவோம்-அடக்குவோம்

இறைவா..,
என்னையொரு
பானையாய் வனைந்து
பொன் பொருள் என
நீ இட்டு நிரப்பியும்
போதாமல்
இன்னும் உன்னிடம்
குறையிரந்துகொண்டே இருக்கிறேன்
நான்.

கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.

பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி
போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.

ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள். நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?
'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்' இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'

இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.

அவர் அடங்க தவறிட்டாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.

அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன
அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள்.
சாதாரண இருள் அல்ல ஆர் இருள். ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து
எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும்.

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.

நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.

கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.

வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்.. இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம். எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நாங்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ "ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"

அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால்
பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?
சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.

Source: http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/fc7a1e219b4c061a?fwc=1

Friday, October 8, 2010

மனித சக்தி மகத்தான சக்தி

மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.

மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.

சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

மூலாதாரம்:
உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்:
உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:
உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அநாகதம்:
இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.

மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.

விசுக்தி:
என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆக்ஞை:
இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.

சஹஸ்ரஹாரம்:
இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுவில் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.

ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.

சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. அப்போதுதான் தோத்தாபுரி என்கிற ஞானி இராமகிருஷ்ணரைக் கண்டார். முழுமையான வளர்ச்சிக்குரியவர் ஒரு எல்லையிலேயே தேங்கி நிற்பது கண்டு அவரிடம் நிறையப் பேசிப் பார்த்தார்.

இராமகிருஷ்ணர் ஒப்புக் கொள்ளவில்லை. தோத்தாபுரி, அருகிலிருந்த ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, இராமகிருஷ்ணரின் ஆக்ஞாவில் அழுந்தக் கிழித்தார். உடனே முற்றிலும் புதிய எல்லையைத் தொட்ட இராமகிருஷ்ணர், பரமஹம்ஸர் ஆனார்.

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. குண்டலினியை எழுப்புவது பற்றியும் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன.

ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.

ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம். வருடத்தின் பனிரெண்டு சிவராத்திரி நாட்களில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி யையே மகா சிவராத்திரி என்கிறோம். இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.

விஞ்ஞானரீதியாகவே மகா சிவராத்திரி நாள் ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிக பெரும் உறுதுணையாக இருக்கிறது மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகு தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது. மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனித தளங்களிலும் ஆலயங்கச்ளிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

யோக மரபில் சிவன் ஒரு கடவுளாக வழிபட படாமல் ஆதி குருவாக, முதலாவது குருவாக கருதபடுகிறார். ஆன்மீக பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில் தான் கைலாய மலையுடன் ஒன்றினைகிறார். அவர் ஒரு மலையை போல முழுமையான நிச்சலனமாகிறார்.

பல்லாண்டு ஆத்மா சாதனைகளுக்கு பிறகு, ஒருநாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆள்கிறார்.அந்த நாள்தான் மகா சிவராத்திரி ஆகும். அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து சலனங்களும் அசைவற்று போகின்றன.

-சற்குரு வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ்


சிவராத்திரி
வாழ்க்கையோடு விளையாடுங்கள்

யோகா


புத்துணர்வுக்கு யோகா
கொஞ்சம் யோகா
உள்நிலைப் பொறியியல்
யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
யோகா மந்த்ரா
Yoga: Benefits
மனித சக்தி மகத்தான சக்தி
அடங்குவோம்-அடக்குவோம்
Sadhguru Speaches

ஜோக்ஸ்


Page 1

ஜோக்ஸ் 1

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
------------------------------------------------------------------------------------------------

சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
------------------------------------------------------------------------------------------------

ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..
அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...

டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...
அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?

டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...

அவன்:- ????????????????
------------------------------------------------------------------------------------------------

இந்திய பாகிஸ்தான் எல்லை. பாகிஸ்தானின் நுழைவு வாயில்.

சர்தார் இளைஞன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் வந்தான். அவன் தோள்களில் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

பாகிஸ்தானின் எல்லைக் காவல் அதிகாரி இக்பால் கேட்டார்; "பையில் என்ன கண்ணா?"

"ஆத்து மண்"

அவர் வாங்கிப் பார்த்தார். உண்மையில் மணல்தான்.

இருந்தாலும் அதைச் சோதனை செய்ய விரும்பிய அவர். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஷெட் ஒன்றில் அவனை இருக்கச் சொன்னார்.

மணல் இருந்த பைகள் இரண்டும் அருகில் இருந்த நகரத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இளைஞன் இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் பரிசோதனை முடிவுடன் பைகள் திரும்பி வந்தன. வெறும் மணல்தான் அவனை உள்ளே விடலாம் என்ற உத்தரவும் இருந்தது.

இக்பால் சர்தாரை உள்ளே அனுமதித்தார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் சர்தார் அங்கே வந்து சேர்ந்தான். தோள்களில் அதே மணல் பைகள் விசாரித்துப் பரிசோதனை செய்தவர். உண்மையில் இந்த முறையும் மணல் இருப்பதையே பார்த்து, அவனை உள்ளே அனுமதித்தார்.

இது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது.

அதோடு மட்டுமல்ல மூன்று வருடங்கள் தொடர்ந்து நடந்தது.

ஒரு நாள் அந்த பாதுகாப்பு அதிகாரி இக்பால், சர்தாரை, இஸ்லாமாபாத் அருகே
உள்ள உணவு விடுதி (தாபா) ஒன்றில் சந்தித்தார்.

குறுகுறுப்புடன், அவனிடம் பேசினார், "டேய் தம்பி! உன்னிடம் வெகு நாட்களாக
ஒன்று கேட்க வேண்டும் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம்
இப்போதுதான் கிடைத்தது."

"என்ன கேட்க வேண்டும்? கேளுங்கள்" என்றான் சர்தார்.

"நீ மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும், சரியா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்! கேட்கட்டுமா?"

"ஆகா, கேளுங்கள், நீங்கள் இவ்வளவு சொல்லியபிறகு மறைப்பேனா?"

"நீ பார்டரின் அந்தப் பக்கம் இருந்து எதையோ கடத்திக்கொண்டு, வாராவாரம் இந்தப் பக்கம் வருகிறாய் என்று உணர்கிறேன். ஆனால் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை!. சொல்லுடா, கண்ணா, எதை அப்படிக் கடத்துகிறாய்?"

சர்தார் தன் கையில் இருந்த லஸ்ஸியை ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் புன்னகையுடன் சொன்னான்:

"மோட்டார் சைக்கிள்ஸ்"
------------------------------------------------------------------------------------------------

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார்

"ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
------------------------------------------------------------------------------------------------

சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
------------------------------------------------------------------------------------------------

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் 25 பேர் மாட்டிக் கொள்ள, திடீரென உள்ளே நுழைந்து 6 பேரைக் காப்பாற்றினார் அந்த சர்தார்ஜி. ஆனாலும் அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்தது போலீஸ். ஏனாம்?

பின்னே, அவர் வெளியே இழுத்துக் காப்பாற்றிய அந்த 6 பேரும் தீயணைப்பு வீரர்களாச்சே!
------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும் மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------

Friday, October 1, 2010

Solve Rubik's Cube







Rubik’s Cube Kid

This 6 year old may not be able to multiply numbers, but he’s able to solve a 3×3x3 Rubik’s cube faster than anyone I’ve seen. Little Chun Hoo Ulf Wong can solve the puzzle in a stunning 37.89 seconds. Imagine if he had bigger hands!

Wednesday, September 29, 2010

Yoga: Benefits

You're never too young or too old to reap the health benefits of yoga. Find out how all types of yoga can improve your health.

Yoga, the Sanskrit word for "union", is a practice that uses posture and breathing techniques to induce relaxation and improve strength, and its health benefits may surpass those of any other activity. Whether you practice yoga to relax, stretch, breathe, meditate, or simply because it's in fashion, you may not realize the numerous health benefits of yoga. And while there are many different kinds of yoga, ranging from the more gentle hatha yoga to the more strenuous, every form of yoga improves your health from head to toe. Here are some of yoga's many health benefits.

Benefits of Yoga to Your Bones, Muscles, and Joints
The physical benefits of yoga are myriad. Yoga keeps your body strong, as it involves all the muscles in your body to hold and balance yoga asanas (poses). The various yoga postures strengthen your feet, legs, hands, abdominals, lower back, legs, and shoulders.
Yoga's stretching and breathing exercises improve your flexibility, helping joints, tendons, and muscles stay limber. People suffering from osteoarthritis or rheumatoid arthritis will see a noticeable improvement in their stiffness, pain, and other arthritic symptoms by practicing yoga poses and postures.

Yoga improves your endurance, especially the more athletic forms of yoga such as ashtanga yoga, power yoga, vinyasa yoga, and Bikram yoga. These rigorous yoga practices follow a specific sequence of poses (asanas) that become more challenging as you progress. Unlike the more gentle hatha yoga, the forms of ashtagna yoga, power yoga, vinyasa yoga, and Bikram yoga require you to keep your body in constant motion between poses, resulting in a strenuous cardiovascular workout and improved core strength.

Hatha yoga can relieve chronic back and neck pain, since the poses and postures gently stretch and strengthen your back and neck muscles.

Yoga is often prescribed to help heal various injuries, including repetitive strain injuries, knee and back injuries, pulled hamstrings, even minor skin burns. Of course, you should consult your physician before using yoga as a treatment for any injury!

Yoga is an excellent weight-bearing exercise that can improve your bone density. This is particularly beneficial for women approaching menopause, since yoga can help ward off osteoporosis, or thinning of the bone.

Benefits of Yoga to the Cardiovascular System
Yoga has tremendous health benefits for your heart. Most notably:

The gentler forms of yoga lower your blood pressure because the asanas (yoga poses, postures, and yoga positions) keep blood flowing evenly throughout your body while you focus on your breathing.

People suffering from hypertension can benefit from yoga tremendously, as hatha yoga can lower your heart rate and blood pressure. Many practitioners claim that yoga has also lowered their cholesterol.

Benefits of Yoga on Mental Health
Yoga benefits anyone's mental health by helping him or her relax, and it is an effective form of psychological therapy. Yoga reduces anxiety and stress, resulting in better health, better mood, and better concentration throughout the day. Yoga has been used to help treat a wide variety of emotional and mental disorders, including acute anxiety, depression, and mood swings.
Even children can benefit from yoga. Those with attention deficit disorder and hyperactivity can learn to relax and get control by using yoga breathing and yoga asanas.
Because yoga is a form of meditation, it results in a sense of inner peace and purpose, which has far-reaching health benefits.
Yoga has been used to help heal victims of torture or other trauma.

Benefits of Yoga on Other Health Conditions
Do you have frequent headaches? Yoga can rid you of tension headaches and migraines because yoga circulates blood and oxygen to your head, which can often prevent headaches from starting.
A regular yoga practice helps boost antioxidants throughout your body, resulting in a stronger immune system and improved ability to heal quickly from disease or injury.
Yoga can help you lose weight and maintain a healthy weight throughout your life. Power yoga is a vigorous form of yoga that burns calories, resulting in weight loss.
Many women going through menopause report an easing of symptoms when they begin practicing yoga.

Benefits of Yoga in Everyday Life
Yoga can help cure insomnia, as regular yoga practice leads to better and deeper sleep.
Yoga can help fight fatigue and maintain your energy throughout the day.
Yoga is an effective treatment for a variety of autoimmune diseases because it can reduce the symptoms these diseases often cause, such as stiffness, malaise, fatigue, and weakness.
Regular yoga practice will create multiple and noticeable benefits to your health. Try some yoga postures today! And as your instructor will no doubt tell you at the end of your practice: Namaste.

Thanks http://www.yogawiz.com/

Tuesday, September 28, 2010

யோகா மந்த்ரா

யோகப் பயிற்சிக்கு முன் / உணவுக்கு முன்

ஓம்... ஓம்...ஓம்...
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி

(கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி... சாந்தி...சாந்தி)

யோகப் பயிற்சிக்கு பின்

ஓம்... ஓம்... ஓம்...
அஸத்தோமா ஸத்கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


(எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.)

http://ishayoga.weebly.com/

கவனிக்க வேண்டியவை

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

1. நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.

2. சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.

3. யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும்.. எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்

4. வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்

5. வியர்வை அதிகம் வராது ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.

6. அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவரச வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும்.

7. தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.

8. யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும்.

9. ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.

10. தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.

11. யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளி பட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.

12. சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.

13. பக்கத்தில் சுவர் அல்லது தூண் இருந்தால் அதன் துணையுடன் சிரசாசனம் செய்யலாம்.

14. செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம்

15. மது, புகை, டீ, காப்பி, அதிக காரம் உப்பு புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.

16. உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.

17. மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும்.

18. ரொம்ப நேரம் கண்விழித்து வேலை செய்தவர்கள் 1 நிமிடம் சிரசாசனம் செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.

19. இரவில் தூக்கம் வராதவர்கள் குளித்துவிட்டு யோகநித்திரை பயிற்சியை மேற்கொள்ளலாம்.

20. பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை.

21. அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும்

22. உடனே எழுந்து வேற வேலைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் சவாசனம் முழுவிழிப்புடன் செய்யவேண்டும். தூங்கிவிட வாய்ப்புள்ளது.

23. யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

24. யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம்.. அல்லது அமைதியான இசையை கேட்கலாம்.

25. யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

26. ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும்

27. கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்யவும்.

28. யோகாசனம் மனித உடலுக்கும் உள்ளத்திற்குமானது. இதில் மதப்பாகுபாடு கூடாது.

Source: http://tamilnanbargal.com

உள்நிலைப் பொறியியல்

நல வாழ்விற்கான தொழில்நுட்பம்
( தமிழ்நாட்டில் 'ஈஷா யோகா' என்றும் அழைக்கப்படுகிறது )

உள்நிலைப் பொறியியல், ஒருவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக அளிக்கப்படும் தீவிரதன்மையுடைய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியும், அதன் சூழலும் வாழ்க்கையின் உயர் பரிமாணங்களைத் தேடி அறிந்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு அமைத்துத் தருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உள்நிலை விஞ்ஞானமாகிய யோகா மூலம் ஒருவர் தன்னை அறிந்துக் கொள்வதற்கு கருவிகளை அளிக்கிறது. தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் உற்சாகத்துடன் இருப்பதற்கும், கருவிகள் கிடைத்தவுடன் மக்கள் தங்களுடைய ஆரோக்கியம், உள்நிலை வளர்ச்சி மற்றும் வெற்றி ஆகிய எல்லாவித நோக்கிலும் உச்சமடைய முடியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மேன்மையடைய விரும்புவர்களுக்கு இந்த உள்நிலைப் பொறியியல் திறவுகோல்களை அளித்து அவர்களது வேலையிலும், வீட்டிலும், சமூகத்திலும் மிகவும் முக்கியமாக ஒருவரது உள்நிலையிலும் அர்த்தமுள்ளதாகவும், ஆழமானதாகவும் உள்ள உறவுகளுக்கு வழி வகுக்கிறது.

இந்த உள்நிலைப் பொறியியலானது, பலவகை அறிவியல்களின் பரிபூர்ணமான கலவையாக கருதலாம். இது பங்கேற்பாளர்களை ஒரு ஆழமான அடித்தளத்தை அமைப்பதற்கும், வாழ்வின் எல்லா வகையான பரிமாணங்களிலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பதற்கும் அடிகோலிடுகிறது மற்றும் ஒருவரது தீவிரமான தொழில் நடவடிக்கைகளில் ஏற்படும் சவால்களுக்கும், அமைதிக்கும், நலனுக்கும் ஏங்கும் அவரது உள்நிலைக்கும் ஒரு சமநிலையைக் கொடுக்கின்றது.

இந்த வழிமுறை, மன அழுத்தத்திற்கு ஒரு நவீன மருந்தாக அமைகிறது. இது யோக விஞ்ஞானத்திலிருந்து மிகவும் எளிதான ஆனால் சக்தி வாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நம்மை தூய்மைப்படுத்தி நமது ஆரோக்கியத்தையும் உள்நலனையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த நிகழச்சியில், வழிக்காட்டுதலுடன் கூடிய தியானமும் மிகவும் தூய்மையான ஷாம்பவி மஹாமுத்ராவும் அளிக்கப்படுகின்றது. இதை முறையாக தினசரி பயிற்சி செய்தால், இந்த கருவிகள் ஒருவரது வாழ்க்கை அனுபவங்களை பல நிலைகளில் அதிகப்படுத்தும் தன்மையுடையது.

Thanks http://www.ishafoundation.org

கொஞ்சம் யோகா

யோகா பண்றதுக்கு ஆரம்பிக்கும் முன்னாடி சில விஷயங்களை நாம கவனிக்கணும். அதை இங்கு பார்ப்போம்.

1. எப்பையுமே நாம குறிப்பிடாத நேரம் தவிர மூக்கால மட்டுமே மூச்சு விடுங்க

2. நம்மளோட உடல், மனம் எல்லாத்தையும் ஒன்று படுத்துவதற்காகவே இந்த யோகா செய்கிறோம்னு சொன்னோமில்லை. அதுக்கு உடல்நிலை, மனநிலை, ஆன்மீகநிலைன்னு ஒவ்வொரு நிலையிலயும் நாம உணர வேண்டிய விஷ்யங்கள்்யங்கள் இருக்கு. அப்படி ஒவ்வொரு நிலையிலையும் அதை உண்ர்ந்து நாம முன்னேறுனா ரொம்ப நல்லது. சரி அதைவிடுங்க நமக்கு ஆன்மிக நிலை வளர்ச்சியை உணரப் போகிறது பத்தி பேசமாட்டோம். அதுக்கு நானில்லை சித்தி அடையனும். ஆனால் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் தேவையானதை சொல்லுகிறேன். அதுனால ஒரு ஆசனம் செய்யும்போது நாம முக்கியமா கவனிக்க வேண்டியது நம்து உடல்ல ஏற்படுகிற மாற்றங்கள் தான். நாள்பட நாள்பட உங்களுக்கே மனசைப் பற்றி புரியும்.

3. ஒவ்வொரு ஆசனம் முடிந்த பிறகு சவாசனத்துல இருந்த மனதை அமைதிப் படுத்த வேண்டியது ரொமப முக்கியம்.

4. இடைநிலை முதிர்நிலை ஆசனங்கள் செய்யும்போது மாற்று ஆசன்ங்கள் செய்ய வேண்டியது அவசியம்

5. காலைல செய்றது ரொம்ப நல்லது. அதாவது சூரியன் உதயமாகும்போது. சூரியன் மறையும்போதும் செய்யலாம். மற்ற நேரங்கள்ல செய்றதுக்கு அவ்வளவு பயன் இருக்காது.

6. காற்றோட்டமான சுத்தமான இடத்துல வச்சு செய்றது ரொம்ப தேவை. முக்கியமாக நாற்றம் எதுவும இருக்கக் கூடாது. அக்கம் பக்கத்துல நாற்காலி, கட்டில்னு இருந்து நீங்க யோகா பண்ணும்போது்ண்ணும்போது அடி் பட்டுகிட்டா நான் பொறுப்பில்லை.

7. கீழ ஏதாவது விரிச்சுகிட்டீங்கன்னா உங்க உடம்புல வருகிற சக்தி பூமி வழியா போயிடாது.

8. உங்களுக்கு வசதியான உடை உடுத்திக்கூங்க. இருக்கமா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்.

9. பச்சதண்ணில குளிச்சிட்டு பண்ணிங்கன்னா பயன் கூடும்.

10. உங்கள வயிறு காலியாக இருக்கணும். மலச்சிக்கல் வாராம பாத்துக்கூங்க். அதுக்காக இருக்கிற ஆசனமும் நாம பார்ப்போம்.

11. சாப்பாட்டு விஷ்யத்துல இதுதான்னு எதுவும் கட்டாயம் இல்லை. ஆனா மாமிசம், எண்ணெய்ப் பலகாரம், காரம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது்வயிறு. அரைவயித்துக்கு சாப்பாடு,கால் வயித்துக்குத் தண்ணின்னு சாப்பிட்டீங்கனா நம்ம சாப்பாட்டுல இருந்து உற்பத்தியாகுற சக்தியின் அளவு கூடும்.

12. ஒவ்வொரு ஆசனமும் உங்கள் வச்திக்காக பண்றது. அதுனால அதிக்மா கஷ்டப்படுத்தக் கூடாது.

13. ஏதாவது ஆசனம் செய்யும்போது எங்கையாவது அதிகமான வலி இருந்தால் உடனே பயிற்சியை நிறுத்திட்டு மருத்துவரை அணுகுங்கள்.

Thanks http://ayanulagam.wordpress.com

புத்துணர்வுக்கு யோகா

நவீன விஞ்ஞான உலகில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம் ஆகிவிட்டபோதும், மனிதர்கள் ஓய்வின்றி உழைப்பது தொடர்கதையாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் அல்லாமல், பல தனியார் நிறுவனங்களிலும், அரசு துறைகளிலும் கூட ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து உழைக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அதிக உழைப்பு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் களைப்பை ஏற்படுத்தும். இந்த களைப்பை அவ்வப்போது போக்காவிட்டால் அதுவே மன அழுத்தத்துக்கு வழிவகுத்துவிடும். எனவே உடல் மற்றும் மன களைப்பைப் போக்கி உற்சாகத்தை ஏற்படுத்த யோக பயிற்சி சிறந்த வரப்பிரசாதமாகும்.

தூக்கமின்மை, ஓய்வின்மை, கவனச் சிதறல், குழப்பமான மனநிலை, தேவையற்ற பயங்கள் ஆகியவை ஞாபக சக்திக்கு குந்தகம் விளைவித்துவிடும்.
இவர்களுக்கு யோகா பயிற்சி அவசியம். முறையாக, தொடர்ந்து செய்யப்படும் யோகா பயிற்சி, மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என சென்னையைச் சேர்ந்த யோகா குரு ஒருவர் கூறுகிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
யோகா பயிற்சியினால் மனிதனின் படைப்பாற்றல் அதிகரிப்பது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பலரும் யோகா பயிற்சியினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். எடுத்துக்கொண்ட பணியை கவனத்தோடு செய்து வெற்றி பெற யோகா உதவுகிறது.

ஆழ்ந்த தூக்கம்... மேலும் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு முக்கிய ஆதாரம் சீரான தூக்கம். ஆழ்ந்த தூக்கத்தில்தான் உடல் உறுப்புகள் அனைத்தும் முழுமையான ஓய்வு பெறுகின்றன. இதன் மூலம் காலையில் எழும்போது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.ஆனால், இயந்திரமயமான உலகில் பலர் தூக்கத்தையே இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தம் மற்றும் பல்வேறு மன நோய்களுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணம் என உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுப்பதால் தூக்கமின்மை என்ற பிரச்னை தூர விலகிவிடும். முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, பின்னர் வீட்டில் தாங்களாகவே தொடர் பயிற்சியை மேற்கொள்லலாம் என்றார்.

விதிமுறைகள் என்னென்ன? உணவு முறையை சரியானபடி கடைப்பிடித்தால்தான் யோகாவின் முழுமையான பலனைப் பெற முடியும்.
முழு உணவு எடுத்துக்கொண்டால் அடுத்த 4 மணி நேரம் கழித்தே யோகா செய்யவேண்டும்.
சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால் அடுத்த 2 மணி நேரம் கழித்தே யோகா செய்யவேண்டும். டீ, காபி, குளிர் பானங்கள் அருந்தியிருந்தால் அடுத்த ஒரு மணி நேரம் கழித்தே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

யோகா முடித்த பின்னர், அரை மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ள வேண்டும். இதுபோல் பயிற்சி முடித்த அரை மணி நேரத்துக்குப்பின் குளிக்க வேண்டும்.
Thanks Dinamani