Tuesday, September 28, 2010

கொஞ்சம் யோகா

யோகா பண்றதுக்கு ஆரம்பிக்கும் முன்னாடி சில விஷயங்களை நாம கவனிக்கணும். அதை இங்கு பார்ப்போம்.

1. எப்பையுமே நாம குறிப்பிடாத நேரம் தவிர மூக்கால மட்டுமே மூச்சு விடுங்க

2. நம்மளோட உடல், மனம் எல்லாத்தையும் ஒன்று படுத்துவதற்காகவே இந்த யோகா செய்கிறோம்னு சொன்னோமில்லை. அதுக்கு உடல்நிலை, மனநிலை, ஆன்மீகநிலைன்னு ஒவ்வொரு நிலையிலயும் நாம உணர வேண்டிய விஷ்யங்கள்்யங்கள் இருக்கு. அப்படி ஒவ்வொரு நிலையிலையும் அதை உண்ர்ந்து நாம முன்னேறுனா ரொம்ப நல்லது. சரி அதைவிடுங்க நமக்கு ஆன்மிக நிலை வளர்ச்சியை உணரப் போகிறது பத்தி பேசமாட்டோம். அதுக்கு நானில்லை சித்தி அடையனும். ஆனால் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் தேவையானதை சொல்லுகிறேன். அதுனால ஒரு ஆசனம் செய்யும்போது நாம முக்கியமா கவனிக்க வேண்டியது நம்து உடல்ல ஏற்படுகிற மாற்றங்கள் தான். நாள்பட நாள்பட உங்களுக்கே மனசைப் பற்றி புரியும்.

3. ஒவ்வொரு ஆசனம் முடிந்த பிறகு சவாசனத்துல இருந்த மனதை அமைதிப் படுத்த வேண்டியது ரொமப முக்கியம்.

4. இடைநிலை முதிர்நிலை ஆசனங்கள் செய்யும்போது மாற்று ஆசன்ங்கள் செய்ய வேண்டியது அவசியம்

5. காலைல செய்றது ரொம்ப நல்லது. அதாவது சூரியன் உதயமாகும்போது. சூரியன் மறையும்போதும் செய்யலாம். மற்ற நேரங்கள்ல செய்றதுக்கு அவ்வளவு பயன் இருக்காது.

6. காற்றோட்டமான சுத்தமான இடத்துல வச்சு செய்றது ரொம்ப தேவை. முக்கியமாக நாற்றம் எதுவும இருக்கக் கூடாது. அக்கம் பக்கத்துல நாற்காலி, கட்டில்னு இருந்து நீங்க யோகா பண்ணும்போது்ண்ணும்போது அடி் பட்டுகிட்டா நான் பொறுப்பில்லை.

7. கீழ ஏதாவது விரிச்சுகிட்டீங்கன்னா உங்க உடம்புல வருகிற சக்தி பூமி வழியா போயிடாது.

8. உங்களுக்கு வசதியான உடை உடுத்திக்கூங்க. இருக்கமா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்.

9. பச்சதண்ணில குளிச்சிட்டு பண்ணிங்கன்னா பயன் கூடும்.

10. உங்கள வயிறு காலியாக இருக்கணும். மலச்சிக்கல் வாராம பாத்துக்கூங்க். அதுக்காக இருக்கிற ஆசனமும் நாம பார்ப்போம்.

11. சாப்பாட்டு விஷ்யத்துல இதுதான்னு எதுவும் கட்டாயம் இல்லை. ஆனா மாமிசம், எண்ணெய்ப் பலகாரம், காரம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது்வயிறு. அரைவயித்துக்கு சாப்பாடு,கால் வயித்துக்குத் தண்ணின்னு சாப்பிட்டீங்கனா நம்ம சாப்பாட்டுல இருந்து உற்பத்தியாகுற சக்தியின் அளவு கூடும்.

12. ஒவ்வொரு ஆசனமும் உங்கள் வச்திக்காக பண்றது. அதுனால அதிக்மா கஷ்டப்படுத்தக் கூடாது.

13. ஏதாவது ஆசனம் செய்யும்போது எங்கையாவது அதிகமான வலி இருந்தால் உடனே பயிற்சியை நிறுத்திட்டு மருத்துவரை அணுகுங்கள்.

Thanks http://ayanulagam.wordpress.com

0 comments:

Post a Comment