Tuesday, September 28, 2010

உள்நிலைப் பொறியியல்

நல வாழ்விற்கான தொழில்நுட்பம்
( தமிழ்நாட்டில் 'ஈஷா யோகா' என்றும் அழைக்கப்படுகிறது )

உள்நிலைப் பொறியியல், ஒருவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக அளிக்கப்படும் தீவிரதன்மையுடைய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியும், அதன் சூழலும் வாழ்க்கையின் உயர் பரிமாணங்களைத் தேடி அறிந்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு அமைத்துத் தருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உள்நிலை விஞ்ஞானமாகிய யோகா மூலம் ஒருவர் தன்னை அறிந்துக் கொள்வதற்கு கருவிகளை அளிக்கிறது. தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் உற்சாகத்துடன் இருப்பதற்கும், கருவிகள் கிடைத்தவுடன் மக்கள் தங்களுடைய ஆரோக்கியம், உள்நிலை வளர்ச்சி மற்றும் வெற்றி ஆகிய எல்லாவித நோக்கிலும் உச்சமடைய முடியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மேன்மையடைய விரும்புவர்களுக்கு இந்த உள்நிலைப் பொறியியல் திறவுகோல்களை அளித்து அவர்களது வேலையிலும், வீட்டிலும், சமூகத்திலும் மிகவும் முக்கியமாக ஒருவரது உள்நிலையிலும் அர்த்தமுள்ளதாகவும், ஆழமானதாகவும் உள்ள உறவுகளுக்கு வழி வகுக்கிறது.

இந்த உள்நிலைப் பொறியியலானது, பலவகை அறிவியல்களின் பரிபூர்ணமான கலவையாக கருதலாம். இது பங்கேற்பாளர்களை ஒரு ஆழமான அடித்தளத்தை அமைப்பதற்கும், வாழ்வின் எல்லா வகையான பரிமாணங்களிலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பதற்கும் அடிகோலிடுகிறது மற்றும் ஒருவரது தீவிரமான தொழில் நடவடிக்கைகளில் ஏற்படும் சவால்களுக்கும், அமைதிக்கும், நலனுக்கும் ஏங்கும் அவரது உள்நிலைக்கும் ஒரு சமநிலையைக் கொடுக்கின்றது.

இந்த வழிமுறை, மன அழுத்தத்திற்கு ஒரு நவீன மருந்தாக அமைகிறது. இது யோக விஞ்ஞானத்திலிருந்து மிகவும் எளிதான ஆனால் சக்தி வாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நம்மை தூய்மைப்படுத்தி நமது ஆரோக்கியத்தையும் உள்நலனையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த நிகழச்சியில், வழிக்காட்டுதலுடன் கூடிய தியானமும் மிகவும் தூய்மையான ஷாம்பவி மஹாமுத்ராவும் அளிக்கப்படுகின்றது. இதை முறையாக தினசரி பயிற்சி செய்தால், இந்த கருவிகள் ஒருவரது வாழ்க்கை அனுபவங்களை பல நிலைகளில் அதிகப்படுத்தும் தன்மையுடையது.

Thanks http://www.ishafoundation.org

0 comments:

Post a Comment